வாழ்க்கை ஒரு தொடர்வண்டி!
வாழ்க்கை குடும்பஸ்தனுக்கு ஒரு தொடர்வண்டியா இருக்கு!
அவன் நினைச்சா எடுக்குறதுக்கும்,
நினைச்சா நிப்பாட்டுறதுக்கும்,
அவன் நிறைய மெனக்கிட
வேண்டியது இருக்கு!
எல்லாத்துக்கும் மேல
ஒரு இரயில இயக்குறதுக்கும்
பெரும் உந்துதல் வேண்டும்!
காலம் போற வேகத்தில,
கடந்தே போகுது எல்லாமும்!
அவனும் ஓர் பயணியாய் சன்னல் அருகில்
அமர்ந்து வேடிக்கை பார்க்க விரும்புகிறான்,
ஆனால் இந்த பொறுப்பு அவனை விடுவதில்லை!
-செல்வா!
#Life #Family #Duty #TamilPoem #MovingForward #LifeQuotes #FamilyMan #Responsibilities #TrainOfLife #TamilQuotes #SelvaLines #RealityOfLife #Fatherhood

