செல்வா (SELVASANKAR.C)

உலகின் மூத்த தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டதில் பெருமிதம் கொள்பவன். காலங்கடந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு வலிமையாக தோள் கடத்த நினைப்பவன். கரையில் நின்று தமிழ் கடலை வேடிக்கை பார்க்கிறேன், கண்ணில் காண்பது எல்லாம் ஆச்சரியமூட்டுகிறது!!! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!! -செல்வா...

Saturday, 6 June 2026

 வாழ்க்கை!


வாழ்க்கை என்ன நம்மை சும்மாவா விட்டு வைத்தது?


நம்மை விரட்டி விரட்டி அடித்து,

நாம் பயின்று தேறும் வரை

நம்மை வாழ்க்கை விடவேயில்லை!


ஓர்நாள் அல்ல, ஈர்நாள் அல்ல

அல்லல் தொடர்ந்தது நம்மை

நாம் பயின்று அகழும் வரை!


நாமும் சும்மாயில்லை,

எங்கேதான் செல்கிறதென்று பின்தொடர்ந்தோம்,

இன்றோ நாளையோ என்றோ

ஓர்நாள் வந்தடைந்தோம்,

வாழ்வை வென்றடைந்தோம்!


-செல்வா!


#தமிழ்விதை # தமிழ்வரிகள் #கவிதை #தமிழ்கவிதைகள் #செல்வாகவிதைகள் #TamilPoem  #TamilPoetry  #TamilLines #PoetsOfInstagram #IniyaTamilSelva #வாழ்க்கை 

#வாழ்க்கைதத்துவம் #நம்பிக்கை #வெற்றி #LifeQuotesTamil #MotivationTamil 

#PositiveVibes #LifeLessons #OvercomingObstacles




Tuesday, 5 May 2026

வாழ்க்கை ஒரு தொடர்வண்டி!


வாழ்க்கை குடும்பஸ்தனுக்கு ஒரு தொடர்வண்டியா இருக்கு! 


அவன் நினைச்சா எடுக்குறதுக்கும், 

நினைச்சா நிப்பாட்டுறதுக்கும், 

அவன் நிறைய மெனக்கிட 

வேண்டியது இருக்கு!


எல்லாத்துக்கும் மேல 

ஒரு இரயில இயக்குறதுக்கும் 

பெரும் உந்துதல் வேண்டும்! 


காலம் போற வேகத்தில, 

கடந்தே போகுது‌ எல்லாமும்! 


அவனும் ஓர் பயணியாய் சன்னல் அருகில் 

அமர்ந்து வேடிக்கை பார்க்க விரும்புகிறான், 

ஆனால் இந்த பொறுப்பு அவனை விடுவதில்லை! 


-செல்வா!













#Life #Family #Duty #TamilPoem #MovingForward #LifeQuotes #FamilyMan #Responsibilities #TrainOfLife #TamilQuotes #SelvaLines #RealityOfLife #Fatherhood